பெயரளவு ஜி.டி.பி., Vs உண்மை ஜி.டி.பி.,
நாமினல் ஜி.டி.பி Vs ரியல் ஜி.டி.பி.
ஜி.டி.பி என்பது இரண்டு வகையில் வளர்ச்சி அடையும். ஒன்று உற்பத்தி அதிகரிக்கும்போது, இரண்டாவது விலைவாசி அதிகரிக்கும்போது. அதற்கான உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு டூப்பிள் என்ற கற்பனை தேசத்தில், ஆப்பிள் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். 2015ல், ஒரு ஆப்பிளின் விலை 20 ரூபாய். அந்த ஆண்டின், மொத்த ஜி.டி.பி.யின் மதிப்பு 10,000 ரூபாய். 2016ல், ஆப்பிளின் விலை 25 ரூபாயாக உயர்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஆண்டின் ஜி.டி.பி. மதிப்பு 13,750 ரூபாய். இப்போது, ஜி.டி.பி.யின் மதிப்பு 3750 ரூபாய் கூடியிருக்கிறது. அதாவது ஜி.டி.பி.யின் வளர்ச்சி 37.5 சதவீதம் என்று சொல்வோம். இதை பெயரளவு (நாமினல் – Nominal) ஜி.டி.பி. என்கிறோம். இந்த இடத்தில், விலையைக் கவனித்து பாருங்கள். 2015ஐ விட 5 ரூபாய் கூடியிருக்கிறது. ஜி.டி.பி.யின் அடிப்படை நோக்கம் நாட்டின் உண்மையான உற்பத்தி சக்தியை அளவிடுவதுதான் என்று ஏற்கெனவே கூறியிருந்தோம். அப்படியெனில், விலைவாசி ஏற்றத்தால், அதிக ஆப்பிள் உற்பத்தி செய்யப்பட்டிருப்பது போல் தோற்றம் ஏற்படுகிறது.
இப்படி மாற்றி யோசிப்போம். உண்மையில், எத்தனை ஆப்பிள்கள் உற்பத்தி செய்யப்பட்டன என்பதைக் கணக்கிடுவோம்.
2015ல் உற்பத்தி செய்யப்பட்ட ஆப்பிள்களின் எண்ணிக்கை
10000
20 = 500
2016ல் உற்பத்தியான ஆப்பிள்களின் எண்ணிக்கை
13750
25 = 550
இதன்படி பார்த்தால், உண்மையான வளர்ச்சி என்பது 10 சதவீதம்தான். ஆனால், விலையேற்றத்தின் காரணமாக, 37.5 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக நாமினல் ஜி.டி.பி.யில் தோன்றுகிறது.
எனவே, விலையை ஒரே அளவாக சமநிலைக்கு கொண்டு வந்தால்தான், உண்மையான உற்பத்தி சக்தியை (ரியல் ஜி.டி.பி. – Real GDP) கணக்கிட முடியும். இல்லாவிட்டால், பணவீக்கத்தை, ஜி.டி.பி.யின் வளர்ச்சி என்று கருவதுதற்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடும். புரிந்துகொள்வதற்காக, ஒரு பொருளை மட்டும் எடுத்துக்கொண்டோம்.
எந்த ஆண்டு விலைவாசியுடன் ஒப்பிடுகிறோமோ அந்த ஆண்டை தொடக்க ஆண்டாக (Base Year) வைத்துக்கொண்டு, நடப்பு ஆண்டிலுள்ள (current year) உற்பத்தி அளவை தொடக்க விலையின் அளவில் கணக்கிடுவார்கள். இந்த முறையை பணச்சுருக்க முறை (deflator method) என்கிறார்கள். மேற்சொன்ன உதாரணத்தில், ஆப்பிளின் உற்பத்தி வளர்ச்சியைக் கணக்கிடும்போது, 2016ம் ஆண்டின் விலை 25 ரூபாயாக இருந்தாலும், அதற்கு முந்தைய ஒப்பீட்டு ஆண்டான 2015ன் விலையான 20 ரூபாயை மதிப்பாக வைத்தே கணக்கிட வேண்டும். அப்படி செய்வதால், விலையேற்றத்தின் பாதிப்பைத் தவித்துவிட முடியும். இவ்வாறு செய்வதை, உண்மையான ஜி.டி.பி. அல்லது நிலையான விலையில் ஜி.டி.பி. (GDP at Constant Prices) என்கிறார்கள். இதன் அடிப்படையில் மட்டுமே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கணக்கிடப்படுகிறது.
ரோஷன் செல்வரத்தினம், பொருளியல் ஆய்வாளர்

Comments
Post a Comment